சுகாதார அமைச்சு

சித்த மத்திய மருந்தகம் பருத்தித்துறை தொண்டைமானாறு திறப்பு விழா

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்திற்கு திருமதி.ஜெயதேவி நாகேந்திரன் அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட 120 பேர்ச்சஸ் காணியில் PSDG நிதியின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண கொளரவ ஆளுனர் அவர்களால் 09.07.2024 அன்று உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சுகாதார சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர்பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், சுதேச மருத்தவ திணைக்கள பிரதி ஆணையாளர், […]

சித்த மத்திய மருந்தகம் பருத்தித்துறை தொண்டைமானாறு திறப்பு விழா Read More »

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு

தொண்டைமானாற்றில் மாகாண சுதேச மருத்துவத்திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் புதிதாக கட்டப்பட்ட சித்தமத்திய மருந்தகத்தின்  பால்காய்ச்சும் ஆரம்ப நிகழ்வு மாகாண சுதேசமருத்துவ திணைக்கள ஆணையாளர் தலைமையில் 10.04.2024 ம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள பிரதி ஆணையாளர் இகணக்காளர்இ திணைக்கள உத்தியோகத்தர்கள், உரியகாணியின் நன்கொடையாளர்,  செல்வச்சந்நிதி ஆலய சமயப்பெரியார்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் இபிரதேச மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்புதிய கட்டடமானது பருத்தித்துறை பிரதேச செயலக மக்களிற்கு சுதேச மருத்துவத்துறையூடாக சுகாதார சேவைகளை

சித்த மத்திய மருந்தகம் தொண்டைமானாறு ஆரம்ப நிகழ்வு Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2024

2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 14.03.2024 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் ஆரோக்கியத்தில் உணவின் முக்கியத்துவம் தொடர்பாக சிறுதானியங்கள், பாரம்பரிய உணவுகள், இயற்கைப்பானங்கள் மற்றும் மூலிகைக் கன்றுகள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற பெண் வைத்தியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற முன்பள்ளி ஆசிரியை ஆகியோர் கௌரவிக்கப்பட்டு அவர்களிற்கு

சர்வதேச மகளிர்தினம் – 2024 Read More »

சிரமதான நிகழ்வு மாவட்ட சித்த மருத்துவமனை – மன்னார்

மன்னார் சித்த மருத்துவமனையின் வருடாந்த சிரமதான நிகழ்வின் ஒரு பகுதியாக 2024.03.06ந் திகதி மன்னார் மாவட்ட சிறுநாவுக்குளத்திலுள்ள கெமுனு வோட்ச் இன் 10ம் படையணி வீரர்களும் மருந்துவமனை ஊழியர்களும் இணைந்து சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டனர். வைத்தியசாலை சுற்று சூழலினை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியத்தை பேணும் வகையில் இச் சிரமதானமானது படையணி வீரர்களாலும் மருத்துவமனை ஊழியர்களாலும் ஒன்று சேர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இச்சிரமதானத்தில் மருத்துவமனை சுற்றுப்பறச் சூழலானது பூரணமாக சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலில் நடப்பட்டிருந்த மருத்துவ தாவரங்களிற்கு உரிய பாதுகாப்பு

சிரமதான நிகழ்வு மாவட்ட சித்த மருத்துவமனை – மன்னார் Read More »

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை – இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 1253 நோயாளர்களிற்குகான கண் புரை சத்திரசிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டது. மன்னார், வவுனியா முல்லைத்தீவு மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த நோயாளிகள் இம் முகாமினால் பயன் பெற்றனர். இம்முகாமானது கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டலுடனும் இந்திய துணை தூதரகத்தின் பங்களிப்புடனும் நடைபெற்றது. இதற்கான முழு அனுசரனைகளையும் மலேசிய ஆலக்கா மற்றும் ஆனந்த மன்றங்கள் (Alaka and Ananda Foundation) வழங்கியதுடன் இதற்கான ஒருங்கிணைப்பினை Assist RR ( UK & SL) நிறுவனம்

வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலை – இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம் Read More »

வட மாகாண வைத்தியசாலைகளிற்கு தாதியர் நியமனம்

தாதிய டிப்ளேமா பயிற்சி நெறியைப்பூர்த்திசெய்தவர்களிற்கான தாதிய நியமனங்கள் வகுப்பு 3 தரம் 0II ற்கு கடந்த 22 மற்றும் 27.11.2023 ந் திகதிகளில் சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு வடமாகாண சுகாதார திணைக்களத்தில் இடப்பெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து நியமனங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்;வின்போது வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.

வட மாகாண வைத்தியசாலைகளிற்கு தாதியர் நியமனம் Read More »

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

யாழ் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் பயிற்சியை நெறியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பயிலுநர்களிற்கான இலச்சினை அணிவிக்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 21.11.2023ம் திகதி அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, வடக்கு மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய

அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு Read More »

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி

கண்டாவளை பிரதேச செயலக சிறு தொழில் முயற்சிப்பிரிவு உத்தியோகத்தரினால் மூலிகைக் கிராமம் கல்மடுநகரில் கடந்த 21.09.2023 ந் திகதியன்று காலை 9.00 மணியளவில் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டது. இவ் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறியானது வளவாளரான திரு.ச.நிரோசன் அவர்களினால் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பயிற்சி நெறியில் தேன் மற்றும் தேனீக்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள், தேனீக்கள் கூட்டத்தில் உள்ள தேனீக்கள் பற்றிய அறிமுகம் அவற்றின் வாழ்க்கை வட்டம், தேனீ வளர்ப்பின் போது கவனத்தில்

தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்சி நெறி Read More »

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை சமூகத்தினிடையே பாரம்பரிய உணவு மற்றும் அவற்றின் தயாரிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது Food & Agriculture Organization of United Nation இன் அனுசரனையுடன் செய்முறை காட்சிப்படுத்தல் ஒன்றினை தயாரித்து வருகின்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய உணவு, சிற்றுண்டி மற்றும் பானங்கள் தொடர்பான செய்முறைகளுடன் கூடிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனை தயாரித்து பாடசாலைகளிற்கு வழங்குவதன்

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு Read More »

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா Read More »