சுகாதார அமைச்சு

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்

கௌரவ மீன்பிடித்துறை அமைச்சர் ஆர். சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே. ரஜீவன் மற்றும் கண்டவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தகரன் ஆகியோர் கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு 03 ஜூலை 2025 அன்று விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின போது வைத்தியசாலையின் செயற்பாடுகள், வழங்கப்படும் சேவைகள், மாகாண மூலிகை கிராமத்தின் வருமானம் பெறும் முறைமைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் ஆகியவை பற்றி கேட்டறிந்ததுடன் மூலிகைச் சிகிச்சை சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பான […]

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார் Read More »

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025

2025 ம் ஆண்டுக்கான PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களிற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இயலளவைக் கட்டியெழுப்பும் பயிற்நெறிகளின் முதலாவது பயிற்சி நெறி வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகினால் 03 யூலை 2025 அன்று கனகபுரத்தில் அமைந்துள்ள முகாமைத்துவபயிற்சி அலகின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் Work Family Balance எனும் விடயம் பற்றி வைத்திய கலாநிதி சிவசுதன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இதில் 20 வைத்தியர்கள் இணைந்து

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025 Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

2025 PSDG நிதியீட்டத்தின் கீழ் வட மகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அச்சுவேலி மருந்து உற்பத்திப் பிரிவிற்கு புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் தேவைகருதி அவற்றினை பார்வையிடுவதற்காக தியத்தலாவையில் அமைந்துள்ள ஊவா மாகாண ஆயுள்வேத திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவிற்கு எமது மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் 25,26,27 /06/2025 ம் திகதிகளில் சென்றிருந்தனர். அங்கு பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையிட்டதுடன் அவற்றின் பயன்பாடு இயங்கு முறைகள் என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டனர். இதில் அச்சுவேலி

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர். Read More »

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் மேற்கொண்டனர்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் ஆகியோர் இன்று (06.06.2025) நேரில் சென்று பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் மேற்கொண்டனர் Read More »

சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம்  திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக திரு. J. தற்பரன் (Attorney-at-Law, சிரேஷ்ட உதவிச் செயலாளர், நீதி அமைச்சு) அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான

சிறுவர் சார்பான உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு Read More »

சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறையானது திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்கள் தலைமையில் RAHAMA நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் வடமாகாண பேரவை செயலக கேட்போர் கூடத்தில் 2024 டிசெம்பர் 18ம்  திகதி நடைபெற்றது. இக் கருத்தரங்கின் வளவாளராக வைத்தியக்கலாநிதி எஸ். சிவதாஸ் (உளநல வைத்திய நிபுணர், போதனாவைத்திசாலை, யாழ்ப்பாணம்) அவர்கள்

சிறுவர் கவனிப்பு சேவையுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சேவையாற்றும் அலுவலர்கள் மற்றும் உளவளத்துணை சேவையை வழங்கும் அலுவலர்களிற்கான பயிற்சிப்பட்டறை Read More »

சர்வதேச சிறுவர் தினவிழா 2024

இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினத்தை முன்னிட்டு சிறுவர்தினவிழாவானது மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் 05.10.2024 அன்று இலங்கை வேந்தன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. இவ் ஆண்டுக்கான சர்வதேச சிறுவர்தினம் ‘சிறுவர்களை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’ எனும் தொனிப் பொருளைக் கொண்டு அனுசரிக்கப்பட்டு வருகின்றது. மாகாணமட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மங்கல விளகோற்றலை அடுத்து சிறுவர்களின் மும்மதப் பிரார்த்தனையுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ஆளுனர்

சர்வதேச சிறுவர் தினவிழா 2024 Read More »

வடமாகாண சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கு

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கானது LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் TILKO விடுதியில் செப்ரெம்பர் 26, 27 திகதிகளில் நடைபெற்றது. இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்களின் அழைப்பின் பெயரில் திரு.இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களும் திரு.ஜே.எஸ்.அருள்ராஜ் செயலாளர் சுகாதார அமைச்சு வடமாகாணம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக் கருத்தரங்கின் வளவாளராக

வடமாகாண சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கு Read More »

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது

நெடுவூர் மூவிழா – 2024 இனை முன்னிட்டு உணர்வும் உறவும் அமைப்பானது 05.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை வடமாகாண சுதேச மருத்தவத்திணைக்களத்துடன் இணைந்து மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வினை நெடுந்தீவில் நடாத்தினர். இக்கண்காட்சியில் மூலிகைகள், சிறுதானியவகைகள், பாரம்பரிய ஆரோக்கிய உணவுகள் காட்சிப்படுத்தல்களுடன் அவற்றிற்குரிய விளக்கங்களும் வழங்கப்பட்டன.  மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், இயற்கை மூலிகைப்பாணங்கள், இலைக்கஞ்சி, நீரிழிவு முகாமைத்துவம், சூரிய நமஸ்காரம் போன்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  மாகாண சுதேசமருத்துவத் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும்

மூலிகைக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நெடுந்தீவில் இடம்பெற்றது Read More »

சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வு மாநாடும் 2024

2024 ம் ஆண்டுக்கரிய சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வுமாநாடும் கடந்த 09.08.2024 தொடக்கம் 11.08.2024 ம் திகதிவரை மூன்று நாட்கள் தென்மாகாணம் காலிமாவட்டத்தின் மாநகரசபை வளாகத்தில் நடைபெற்றது. இதில் வடமாகாண சுதேச மருத்துவத்திணைக்களம் கண்காட்சிக்கூடம் ஒன்றினை ஏற்படுத்தியிருந்தது. இதில் பிரதி மாகாண ஆணையாளர் இவைத்தியர்கள் பங்குபற்றியிருந்தனர். இக்கண்காட்சியில் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவினரால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் வெளியீடுகள் மற்றும் ஆரோக்கிய சிற்றுண்டிகள், கோப்பிவகைகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் இடம்பெற்றது.  

சர்வதேச ஆயுள்வேதக் கண்காட்சியும் ஆய்வு மாநாடும் 2024 Read More »