npc2018z

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆளுநருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுக்கும் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு 18 ஜனவரி 2019 அன்ஞ ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச சபைகளின் கடந்தகால நிகழ்கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

ஆளுநர் பல்வேறு சமயத்தலைவர்களை சந்தித்தார்

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தினை மேலும் பலப்படும் நோக்கில் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 15 ஜனவரி 2019  மற்றும்  16 ஜனவரி 2019 ஆகிய தினங்களில் யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை சந்தித்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூ~ணி அம்மான் கோவில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதி வண.மீஹகாஜதுரே

ஆளுநர் பல்வேறு சமயத்தலைவர்களை சந்தித்தார் Read More »

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர்

தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 15 ஜனவரி 2019 அன்று வடக்கு ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர் அவர்கள் வடக்கு ஆளுநர் செயலகத்தின் பணிக்குழாமினருடன் பொங்கல்  பொங்கி சம்பிரதாயபூர்வமாக தைப்பொங்கல் பண்டிகையினைக் கொண்டாடினார். இதன்போது பணிக்குழாமினரிடம் கருத்துத் தெரிவித்த ஆளுநர் அவர்கள் தற்போது  வடக்கு மாகாணத்தில்  ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதனை சுட்டிக்காட்டியதுடன் அந்த நிலைமையினை மாற்றி 2020, 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின்

வடக்கின் அரச அலுவலகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – தைப்பொங்கல் நிகழ்வில் ஆளுநர் Read More »

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – வெண்கலச்செட்டிகுளம்

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் விநியோக  நிகழ்வானது 2018.12.14 ஆம் திகதி  அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களின் வழிகாட்டலில் ஏஞ்சல் மெழுகுதிரி உற்பத்தியாளர் குழு மண்டபம், கன்னாட்டி, வெண்கலச்செட்டிகுளத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வெண்கலச்செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவினைச் சேர்ந்த நான்கு பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மெழுகுதிரி உற்பத்திக்கான ரூபா 99,450.00 பெறுமதியான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.

பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல் – வெண்கலச்செட்டிகுளம் Read More »

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னார் முதலமைச்சர்  சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு ஆளுநருடைய யாழ்ப்பாணஉத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஆளுநருக்கும் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு Read More »

ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம்

  கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 10 ஜனவரி 2019 அன்று நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் சரியான கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் அதனாலேயே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர் அவர்கள் இதுதொடர்பில் உடனடியாக

ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் Read More »

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் 07 ஜனவரி 2019 அன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கலாநிதி சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் Read More »

புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்

வட மாகாணத்திற்கான புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 09 ஜனவரி 2019 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசியுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் வட மாகாண ஆளுநரை வரவேற்றார். சமயத் தலைவர்கள், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,   முன்னாள் வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, யாழ் மாநகர சபை முதல்வர் இமானுவல் ஆனோல்ட், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடக்கு மாகாண மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள்,

புதிய ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் Read More »