Mathuranthaki

கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 19 யூலை 2025 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கல்மடு மூலிகை கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது மூலிகைக் கிராமத்தின் தற்போதைய நிலைமை பற்றி கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அத்தியட்சகர், மருத்துவப் பொறுப்பதிகாரி மற்றும் பணியாளர்கள் ஆகியோரை சந்தித்துக் கேட்டறிந்து கொண்டதுடன் அதன் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.

கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார் Read More »

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தகத்திற்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு 2025 யூலை 11ம் திகதி அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்தவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி தி. சர்வானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புதிய கட்டடத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா Read More »

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின்; ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025.07.17 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வ-பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை குழுமத்தால் வெகு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி விழாவில் கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம

வடக்கு மாகாண ஆடிப்பிறப்பு விழா 2025 Read More »

பாதுகாக்கப்பட்ட வலை இல்லத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் இலாபத்தை நோக்கிய கறிமிளகாய்ப் பயிர்ச்செய்கை

                         இங்கே பார்வையிடவும்          

பாதுகாக்கப்பட்ட வலை இல்லத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உயர் இலாபத்தை நோக்கிய கறிமிளகாய்ப் பயிர்ச்செய்கை Read More »

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் விவசாயப் போதனாசிரியர் பிரிவில்  இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வானது 11.07.2025 அன்று காலை 9.00 மணியளவில் திரு.வே.சந்திரபோஸ் அவர்களின் வயலில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் வட மாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன், காலநிலைக்குச் சீரமைவான விவசாய திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, விவசாயிகள், சமூக நலன் விரும்பிகள் எனப் பல்வேறு தரப்பினரும்

இயந்திர நாற்று நடுகை மூலம் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் வயல் விழா நிகழ்வு Read More »

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்

கௌரவ மீன்பிடித்துறை அமைச்சர் ஆர். சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே. ரஜீவன் மற்றும் கண்டவளை பிரதேச செயலாளர் திரு. பிருந்தகரன் ஆகியோர் கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாண மூலிகைக் கிராமத்திற்கு 03 ஜூலை 2025 அன்று விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின போது வைத்தியசாலையின் செயற்பாடுகள், வழங்கப்படும் சேவைகள், மாகாண மூலிகை கிராமத்தின் வருமானம் பெறும் முறைமைகள் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் ஆகியவை பற்றி கேட்டறிந்ததுடன் மூலிகைச் சிகிச்சை சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்கள் தொடர்பான

கல்மடுநகர் மூலிகை கிராமம் மற்றும் சித்த மருத்துவமனைக்கு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார் Read More »

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025

2025 ம் ஆண்டுக்கான PSDG நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களிற்கு ஒழுங்கு செய்யப்பட்ட இயலளவைக் கட்டியெழுப்பும் பயிற்நெறிகளின் முதலாவது பயிற்சி நெறி வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகினால் 03 யூலை 2025 அன்று கனகபுரத்தில் அமைந்துள்ள முகாமைத்துவபயிற்சி அலகின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் Work Family Balance எனும் விடயம் பற்றி வைத்திய கலாநிதி சிவசுதன் வளவாளராக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இதில் 20 வைத்தியர்கள் இணைந்து

ஆயுள்வேத வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி நெறி -2025 Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

2025 PSDG நிதியீட்டத்தின் கீழ் வட மகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் அச்சுவேலி மருந்து உற்பத்திப் பிரிவிற்கு புதிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்யும் தேவைகருதி அவற்றினை பார்வையிடுவதற்காக தியத்தலாவையில் அமைந்துள்ள ஊவா மாகாண ஆயுள்வேத திணைக்களத்தின் மருந்து உற்பத்திப் பிரிவிற்கு எமது மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் 25,26,27 /06/2025 ம் திகதிகளில் சென்றிருந்தனர். அங்கு பயன்பாட்டில் உள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களைப் பார்வையிட்டதுடன் அவற்றின் பயன்பாடு இயங்கு முறைகள் என்பவற்றையும் கேட்டறிந்து கொண்டனர். இதில் அச்சுவேலி

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள குழுவினர் உவா மாகாணத்தின் மருந்து உற்பத்தி பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டனர். Read More »

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் மேற்கொண்டனர்

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையிலுள்ள பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தினை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் ஆகியோர் இன்று (06.06.2025) நேரில் சென்று பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வடமாகாண ஆளுநர் விஜயம் மேற்கொண்டனர் Read More »

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு

வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் ஒழுங்கமைப்புடன் 2025.06.03-ம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மு.ப. 9.00 மணிக்கு வட பிராந்திய இறைவரித் திணைக்களத்தின் வழிகாட்டுதலில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் (வ.மா) திரு. ந. திருலிங்கநாதன் அவர்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் கூட்டுறவுச் சங்கங்களினால் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான

பெறுமதி சேர் வரி (VAT ) தொடர்பான செயலமர்வு Read More »