November 5, 2026

ஏற்றுமதி இடையூறுகளை களைய நடவடிக்கை

வடக்கு மாகாணத்திலிருந்து 2027ஆம் ஆண்டு கள்ளை ஏற்றுமதி செய்வதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்குத் தடையாக உள்ள அதிகாரிகள் சார்ந்த நிர்வாக இடையூறுகளைக் களைவதற்குரிய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி அபிவிருத்தியில் பனை, தென்னை மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக, வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் […]

ஏற்றுமதி இடையூறுகளை களைய நடவடிக்கை Read More »

கணினிமயமான அரச சேவைகளில் மனிதநேயமும் விரைவும் குறைந்துள்ளன – ஆளுநர் கவலை

மனிதவளத்தைப் பயன்படுத்தி நேரடியாக அரச சேவைகள் வழங்கப்பட்ட காலத்தில் அதிகாரிகளிடம் காணப்பட்ட மனிதநேய அணுகுமுறையும் சேவைகளை விரைந்து வழங்கும் பண்பும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கணினிமயமான சேவைகள் நடைமுறைக்கு வந்துள்ள தற்போதைய சூழலில் குறைந்துள்ளமை கவலைக்குரியது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அலுவலர்களுக்குக் காலத்துக்குக் காலம் பயிற்சிகள் வழங்கப்படுவது அவர்களின் திறன்களை மேம்படுத்தி, மக்களுக்கான சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கே எனக் குறிப்பிட்ட ஆளுநர், அந்த இலக்கை அடைவதற்கு இன்னும் பயணிக்க வேண்டியுள்ளதாகவும்

கணினிமயமான அரச சேவைகளில் மனிதநேயமும் விரைவும் குறைந்துள்ளன – ஆளுநர் கவலை Read More »

மாகாண சபைகளின் நிதிச் செலவின முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவுடன் மாகாண ஆளுநர்கள் கலந்துரையாடல்

நிதி ஆணைக்குழுவுக்கும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுக்கும் இடையிலான இணையவழிக் கலந்துரையாடல் இன்று (04.11.2026) புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களின் முன்னேற்றம், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் டித்வா மீள்கட்டுமானப் பணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. மேலும், எதிர்காலத்தில் மாகாண சபைகளின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முன்னெடுப்பதற்காக, கொள்கை ரீதியாக ஆராயப்பட வேண்டிய விடயங்கள்

மாகாண சபைகளின் நிதிச் செலவின முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவுடன் மாகாண ஆளுநர்கள் கலந்துரையாடல் Read More »