October 8, 2026

கைதடியில் கால்நடைகளுக்கான புதிய கேணி – மக்கள் முன்முயற்சியை ஆளுநர் பாராட்டு.

ஒரு கிராமம் வளர்ச்சியடைவது அரசாங்கத்தின் முயற்சிகளில் மட்டுமல்ல, அந்தக் கிராம மக்களின் ஆர்வத்திலும், முன்முயற்சியிலும், தமது தேவைகளைத் தாமே அடையாளம் கண்டு அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதிலும்தான் தங்கியிருக்கிறது. இன்று கைதடி மக்கள் தமது கிராமத்தின் தேவையை உணர்ந்து, அதற்காக இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பெறுபேறாக இந்தக் கேணி உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தற்போது நிலவும் எல்நினோ காலநிலைச் சவாலால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியைக் கருத்திற்கொண்டு கால்நடைகளுக்கான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி […]

கைதடியில் கால்நடைகளுக்கான புதிய கேணி – மக்கள் முன்முயற்சியை ஆளுநர் பாராட்டு. Read More »

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் – ஆளுநர்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் திட்டங்கள் மற்றும் நிதிப் பயன்பாட்டில் இம்முறை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், ஒதுக்கப்பட்ட நிதிகளை உரிய முறையில் விரைந்து பயன்படுத்தி திட்டங்களை தாமதமின்றி நிறைவு செய்யுமாறு பணிப்புரை வழங்கினார். அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்கும் ஒருங்கிணைந்த செயற்றிட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய நான்கு மாவட்டங்களிலும் முக்கியத்துவத்துடன் முன்னெடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறையின் முன்னேற்றத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் – ஆளுநர் Read More »

ரூ.4,081 மில்லியன் செலவில் 516 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – மக்களுக்கு ஏற்பட்ட பயன்களை ஆவணப்படுத்த ஆளுநர் பணிப்பு

விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அபிவிருத்திப் பணிகளுக்காக ஐந்து நிதி மூலங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 516 வேலைத்திட்டங்கள் 4,081 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இத்திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நேரடி மற்றும் நடைமுறைப் பயன்களை முறையாக ஆவணப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,

ரூ.4,081 மில்லியன் செலவில் 516 வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு – மக்களுக்கு ஏற்பட்ட பயன்களை ஆவணப்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »