வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பில் நெடுந்தீவில் நீண்டகாலமாக தூர்வாரப்படாத 13 கேணிகள் புனரமைப்பு.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்பின் பேரில், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் நெடுந்தீவு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு, நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் காணப்பட்ட 13 கேணிகள் இயந்திர மற்றும் மனிதவலு மூலம் தூர்வாரப்பட்டுள்ளன. நெடுந்தீவில் மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைப்பதற்கும், வறட்சி காலங்களில் மக்களின் நீர்த் தேவைகளை ஓரளவுக்கு ஈடுசெய்வதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கேணிகள் நீண்டகாலமாக உரிய முறையில் பராமரிக்கப்படாமல் காணப்பட்ட நிலையில், ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி […]
