September 29, 2026

கௌதாரிமுனை சுற்றுலா முதலீடுகளுக்கான காணிகளை அடையாளப்படுத்த பல்துறை குழு நியமனம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி கௌதாரிமுனைப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறை முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ள முதலீட்டாளர்களுக்குக் காணிகளை ஒதுக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், திணைக்களங்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உள்ளடக்கிய பல்துறை குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் கௌதாரிமுனையில் சுற்றுலாத்துறை முதலீட்டாளர்களுக்காக இன்று (27.09.2026) […]

கௌதாரிமுனை சுற்றுலா முதலீடுகளுக்கான காணிகளை அடையாளப்படுத்த பல்துறை குழு நியமனம் Read More »

வடக்கு மாகாண மாணவர்களுக்கு 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான ஜனாதிபதி நிதிய உதவி வழங்கப்பட்டது

எமது நாட்டின் இலவசக் கல்வியைப் பயன்படுத்தி கற்று இன்று பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் நீங்கள் அங்கும் இலவசக் கல்வியையே பெறவுள்ளீர்கள். நீங்கள் படித்து முடித்த பின்னர் உங்களுக்கு இலவசக் கல்வியை வழங்கிய இந்த நாட்டுக்கு, உங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சேவையாற்றவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மாணவர்களுக்கு 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான ஜனாதிபதி நிதிய உதவி வழங்கப்பட்டது Read More »

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை – முதலீட்டுச் சபைத் தலைவர் மற்றும் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய மூன்று முதலீட்டு வலயங்களின் முன்னேற்றம், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சவால்கள் மற்றும் முதலீடுகளை விரைவாக ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான குழுவினருக்கிடையில் இன்று (26.09.2026) சனிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்த ஹூலன்ஹமுவ தலைமையிலான

வடக்கு மாகாணத்தில் முதலீட்டு வலயங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை – முதலீட்டுச் சபைத் தலைவர் மற்றும் ஆளுநர் கலந்துரையாடல் Read More »