நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு 09ஆம் திகதி விடுமுறை வழங்க ஆளுநர் அறிவுறுத்தல்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கௌரவ ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான […]
