August 19, 2026

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம்

மேலும் இரு இடங்களில் மண் கழுவும் பணிக்கான கேள்விக் கோரலை விரைவுபடுத்தவும் ஆளுநர் பணிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல் உரிய அனுமதிகளுடன் பொதுமக்களுக்குத் துரிதமாக விநியோகிப்பதற்கும், இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான […]

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம் Read More »

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொண்டு, அந்த மாற்றங்களுக்குள் எம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். ஒரு மனிதனின் அறிவிலும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கருவியாகப் பயிற்சி அமைகின்றது. எனவே, நீங்கள் பெற்ற பயிற்சியின் உண்மையான பலன் உங்கள் பணியில் வெளிப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவின் கீழ் இயங்கும் முகாமைத்துவ

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர் Read More »

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில்

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »