August 9, 2026

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை எனும் மென்பொருள் அறிமுகம்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான கொள்கைகளில் ஒன்றான அரச சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கை முன்னிறுத்தி, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை (LGPMS – Local Government Payment Management System) எனும் மென்பொருள் அமைப்பு தொடர்பான செயல்முறைப் பயிற்சி வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி […]

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை எனும் மென்பொருள் அறிமுகம் Read More »

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் நேற்று (07.08.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி கு. காஞ்சனா அவர்கள் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் Read More »

கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன், கூட்டுறவுச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாதகமான சூழலை வடக்கு மாகாணம் முழுமையாகப் பயன்படுத்தி, கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மாநாடு இன்று

கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »

வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் ஒவ்வொரு மாணவரும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் – கௌரவ ஆளுநர்

கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், ‘எங்களால் எதுவும் முடியாது என்றில்லை, முயன்றால் எதுவும் முடியும்’ என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய

வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் ஒவ்வொரு மாணவரும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »