சுகாதாரப் பணி உதவியாளர் பதவிக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வுகள் பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடமாகக் காணப்படும் சுகாதாரப் பணி உதவியாளர் (தரம் III) பதவிக்கான 852 வெற்றிடங்களில், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக்கமைவாக 300 வெற்றிடங்களை நிரப்புவதற்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள் இன்று திங்கட்கிழமை (03.08.2026) பண்ணையில் அமைந்துள்ள சுகாதார கிராமத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றன. இன்று முதல் எதிர்வரும் 21.08.2026 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இத்தேர்வு நடவடிக்கைகளுக்காக ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தினமும் […]
