August 2, 2026

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, மாகாணம் தழுவிய ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கான நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி […]

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More »

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார். Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் மிகவும் அவசியமானவையாகும். முதலீட்டாளர்கள் உரிய காலப்பகுதிக்குள் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு திணைக்களம் அனுமதி வழங்கினாலும், மற்றுமொரு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற தாமதமாவதால் முதலீட்டாளர்கள் விரக்தியடைகின்றனர். இது தொடர்பில் அனைத்துத் திணைக்களங்களும் விசேட கவனம் செலுத்துவதோடு, தேவைப்படின் நிபந்தனைகளுடனாவது அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும். அதேவேளை, முதலீட்டாளர்களும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், என கடற்றொழில், நீரியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »