வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், சபையின் பொது முகாமையாளர் மற்றும் உதவிப் பொது முகாமையாளர் ஆகியோரும் ஆளுநருடன் உடனிருந்தனர்.