அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை
அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (27.07.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் […]
