எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல் விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின் […]
