July 2026

மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இம்முறை மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும், எதிர்காலத்தில் மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கே எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கல்வித் துறை மற்றும் பட்டதாரிப் படிப்புகள் பீடம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது சர்வதேச கல்வி மாநாட்டின் ஓர் முக்கிய அங்கமாக, ‘வடக்கு மாகாணத்தில் க.பொ.த. (சாதாரண தர) அடைவு மட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான […]

மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (17.07.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக்

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

‘நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில்

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More »

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவி ஊற்றுக்குளத்தில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான புனரமைப்புப் பணிகளை 75 நாட்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் குளத்தின் கீழ்

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். – கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம், என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர்

இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். – கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »