June 23, 2026

கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்

விளையாட்டுகளில் ஈடுபடுவதன் ஊடாகவே, ஏனையோரை மதிப்பதற்கும் அவர்களின் திறமைகளை அங்கீகரித்துப் பாராட்டுவதற்குமான தலைமைத்துவப் பண்பையும், மிக முக்கியமாகச் சுய ஒழுக்கத்தையும் நாம் கற்றுக்கொள்ள முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (22.06.2026) திங்கட்கிழமை காலை கௌரவ ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். […]

கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (22.06.2026) திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தில் இதுவரை ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளுக்கு ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். குறிப்பாக, போரால் இடம்பெயர்ந்த மக்களின்

‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 566 பேர் 9 ‘ஏ’ சித்திகள்!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில் 70.1 சதவீதமானோர் உயர்தரத்துக்குத் தகுதி ; 566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்திகள்! நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் 566 பேர் 9 ‘ஏ’ சித்திகள்! Read More »