June 20, 2026

யாழ். – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20.06.2026) சனிக்கிழமை காலை நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய […]

யாழ். – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

‘வடக்கு மாகாணத்தை இலங்கையின் பொருளாதார மையமாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.’ – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, அதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை கௌரவிக்கும் இரண்டாவது வர்த்தகச் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஜே ஹோட்டலில் நேற்று (19.06.2026) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

‘வடக்கு மாகாணத்தை இலங்கையின் பொருளாதார மையமாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.’ – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

பயன்பாடற்றுக் கிடந்த செயற்கை முறை கருக்கட்டல் (ஐ.வி.எவ்.) சிகிச்சைக்குரிய நவீன உபகரணங்களை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடித் தலையீட்டின் மூலம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் சிறப்புமிக்க செயற்றிட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட ‘பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மகப்பேறு சிறப்பு சிகிச்சை நிலையத்தில்’ பயன்பாடற்றுக் கிடந்த செயற்கை முறை கருக்கட்டல் (ஐ.வி.எவ்.) சிகிச்சைக்குரிய பல மில்லியன் பெறுமதியான நவீன உபகரணங்களை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடித் தலையீட்டின் மூலம் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்றிட்டம் இன்று (19.06.2026) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் அரச மருத்துவமனையொன்றில் உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப

பயன்பாடற்றுக் கிடந்த செயற்கை முறை கருக்கட்டல் (ஐ.வி.எவ்.) சிகிச்சைக்குரிய நவீன உபகரணங்களை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடித் தலையீட்டின் மூலம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் சிறப்புமிக்க செயற்றிட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாம் தற்போது ஆண்டின் அரைப்பகுதிக்கு வந்துள்ளோம். எனவே, எஞ்சியுள்ள மாதங்களுக்குள் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்கள் உருவாக்கம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்களை உருவாக்கி முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அனுமதியளித்துள்ளது. வடக்கு மாகாணத்துக்கான ஆளணி வெற்றிடங்கள் மற்றும் தேவைகள் குறித்து கௌரவ ஆளுநரால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து, அது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் பயனாக, சுமார் 13 ஆண்டுகளின் பின்னர் முகாமைத்துவ

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்கள் உருவாக்கம் Read More »

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன.

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் குறித்த மருத்துவமனைகளின் நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான சாதகமான தீர்மானங்களும் எட்டப்பட்டன. மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மேம்பாடு:

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன. Read More »