சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. மாகாணத்திலுள்ள ஆதார மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், சத்திரசிகிச்சைக் கூடங்களை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நோயாளர் தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் உட்கட்டமைப்புத் திருத்த வேலைகளுக்காக ஆசிய […]
