வடக்கு மாகாண வெசாக் உற்சவம்’, வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்திகள் முற்றுமுழுதான பொய் என்பதை வவுனியாவில் நடைபெற்ற இந்த வெசாக் உற்சவம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றது. பொய் பரப்புபவர்கள் வார்த்தைகளால் பிரிக்க முயல்கிறார்கள், நாம் செயலால் இணைகிறோம்; அதுவே எமது பதில், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்ட […]
