April 24, 2026

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக விவசாயத் துறையில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் […]

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. ஏனைய மாகாண மக்கள் கூட இங்கு வந்து சத்திர சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்’ (Rural Life of Light), முழு நாட்டுக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையப்போகின்றது என வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் இன்று

வடக்கு மாகாணத்தில் தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. ஏனைய மாகாண மக்கள் கூட இங்கு வந்து சத்திர சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார். Read More »

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் கீழ் 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (23.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக சுமார் 1,875 மில்லியன் ரூபா மதிப்பீட்டில் பாரிய உட்கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக,

விவசாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கச்சதீவுப் பெருந்திருவிழாவில்களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபை ஊழியர்களுக்கு கௌரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கௌரவித்தார்.

கச்சதீவுப் பெருந்திருவிழாவின் போது களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபையின் ஊழியர்களைப் பாராட்டி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மெச்சுரை வழங்கி கௌரவித்தார். இந்த விசேட நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (23.04.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.சுதர்சன், கச்சதீவுப் பெருந்திருவிழாவின் வெற்றிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் செயற்பாடும் வகிபாகமும் மிக முக்கியமானதாகும். ஆயினும், களத்தில் நின்று கடுமையாக உழைக்கும் தமக்கான உரிய அங்கீகாரம்

கச்சதீவுப் பெருந்திருவிழாவில்களத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நெடுந்தீவு பிரதேச சபை ஊழியர்களுக்கு கௌரவ ஆளுநர் மெச்சுரை வழங்கி கௌரவித்தார். Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »