வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (22.04.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இவ்வாண்டு முக்கிய அபிவிருத்திப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் […]
