March 30, 2026

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வருமானம் குறைந்த எமது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த […]

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 07.03.2026 அன்று அதிகார சபையின் திடீர்பரிசோதனை உத்தியோகத்தர்கள், பேருந்தில் பரிசோதனையில் ஈடுபட்டபோது, குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்துள்ளார். அத்துடன், 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின்போது அவர் தரக்குறைவாகப் பேசியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளுடன் தரக்குறைவாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு 8 நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது Read More »