March 27, 2026

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. – மன்னாரில் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்

தங்களை மென்மேலும் மேம்படுத்தி, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதில் உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் மக்களுக்குத்தான் அரசாங்கத்தால் உதவ முடியும். மாறாக, அரசாங்கம் வழங்குபவற்றை மாத்திரம் பெற்றுக்கொண்டு சோம்பேறிகளாக இருக்க நினைப்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் மக்கள், தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தித் தமது கிராமத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதில் காட்டும் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். […]

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. – மன்னாரில் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார் Read More »

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

“எந்தவொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்குக் கல்வியும் மருத்துவ சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதீத அக்கறை காட்டி வருகின்றது. அந்த வகையில், இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும் எதிர்வரும் காலங்களில் மேம்பட்ட வசதிகளுடன் தரமுயர்த்தப்படுவதை பரிசீலிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் புதிய பற்சிகிச்சைப்

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளது

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைக்காகச் செல்லும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவையானது கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளது Read More »