March 18, 2026

இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது

இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிராந்திய மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், வவுனியா மற்றும் தெல்லிப்பளைக்கு விசேட தர ஆளணியை உருவாக்க வேண்டும் எனவும் அரசாங்க மருந்தாளர் சங்கத்தினரால் ஆளுநரிடம் கோரிக்கைகள் […]

இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது Read More »

“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகின்றது. தலைமைத்துவப் பண்பு இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. பாடப்புத்தகக் கல்வியுடன் இணைந்து, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் (Co-curricular Activities) மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தேசிய மாணவர் படையணியின் (National Cadet Corps) ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் அப்படையணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால

“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். Read More »