March 13, 2026

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நடைபெற்றது.

எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், உலக வங்கியின் முதற்கட்ட அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய செயற்றிட்டங்கள் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை […]

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் புனிதமானவையாகும். அப் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டே அங்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை மணிக்கு நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில்

கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் புனிதமானவையாகும். அப் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டே அங்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்

மாங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வியாழக்கிழமை (12.03.2026) ஆளுநர் அவர்கள் நேரில் களப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் அவர்களும் ஆளுநருடன் இணைந்திருந்தார். பாலைப்பாணி

பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார் Read More »

‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகளைத் தெரிவு செய்யும்போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன. ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாகச் சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நாம் செயற்பட்டிருக்கின்றோம், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, ‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை

‘தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் – 2026’ எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. Read More »