February 25, 2026

மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் […]

மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். Read More »

தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார்.

இலங்கையிலேயே முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான ‘கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்’ மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியன விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மாலை இரு கட்டங்களாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மூலகாரணமாகத்

தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார். Read More »

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

அரச சேவை ஒரு வரப்பிரசாதம். அர்ப்பணிப்புடன் செயலாற்றி முன்மாதிரியாகத் திகழுங்கள். வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை இன்னமும் மேம்படுத்தும் வகையில் உங்களின் சேவைகள் அமையவேண்டும் என புதிதாக நியமனம் பெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்களிடம் வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மக்களும் மேலதிகாரிகளும் தங்கள் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரிகள்தான் வேண்டும் எனக் கேட்கும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் III) சேவைக்கு புதிதாகத் தெரிவு

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உள்ளூர் உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே அங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள இத்தகைய போலி உற்பத்திகள் எமது மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக அமையும்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர் Read More »

இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெட்விங் விடுதிக்குச்

இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். Read More »

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை.

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பிரதேச சபைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் (2026 – 2036) உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், முதலாவது பங்குதாரர்கள் கூட்டமும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில்

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை. Read More »