போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்
வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும். அதற்கான அடிப்படைத் திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (11.02.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. […]
