January 15, 2026

நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் கிளிநொச்சியில் 08/01/2026 அன்று நடைபெற்றது. மாகாண விவசாய பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மாகாண மற்றும் மத்திய விவசாய திணைக்களங்கள், நீர்ப்பாசன திணைக்களம்,கமநல சேவைகள் திணைக்களம், என்பவற்றின் அதிகாரிகள்,யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர்கள், விவசாய போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்வரும் போகங்களில் களைநெல்லை கூட்டாக […]

நெற்செய்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள களைநெல்லை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்பாட்டுப் பெருவிழாவாகவும், உழவர் திருநாளாகவும் போற்றப்படும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பயிரினங்கள் செழித்து வளர்வதற்குப் பெருத்துணை நின்ற சூரிய பகவானுக்கும், சேற்றில் கால் பதித்துச் சோற்றுப் பயிர் விளைவிக்கும் எமது உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரு உன்னதமான நாளாகவே இந்தத் திருநாள் அமைகின்றது. இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் கொண்ட

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி Read More »

“பொலிஸார் மற்றும் படையினரால் மாத்திரம் போதைப்பொருளை ஒழிக்க முடியாது; மக்களின் பங்களிப்பே பிரதானம்!” – கிளிநொச்சியில் ஆளுநர் வலியுறுத்தல்

உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தனித்து முப்படையினர் மற்றும் பொலிஸார் மாத்திரமே மேற்கொண்டுவிட முடியாது. இந்த நடவடிக்கையில் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். அதன் மூலமே எங்கள் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்க முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதற்கான கிளிநொச்சி மாவட்டக் கலந்துரையாடல் இன்று புதன் கிழமை (14.01.2026) காலை

“பொலிஸார் மற்றும் படையினரால் மாத்திரம் போதைப்பொருளை ஒழிக்க முடியாது; மக்களின் பங்களிப்பே பிரதானம்!” – கிளிநொச்சியில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »