November 2025

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் களவிஜயம் மேற்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை (29.11.2025) கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அவசர களப்பயணத்தை மேற்கொண்டார். மாவட்டச் செயலர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடன் களத்தில் நின்றவாறு நிலைமைகளை ஆராய்ந்த ஆளுநர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு பணிப்புரை விடுத்தார். முதலாவதாக கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்குப் பயணம் செய்த ஆளுநர், மாவட்டச் செயலர் சு.முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடினார். நேற்று […]

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் நிலைமைகளை நேரில் பார்வையிடுவதற்காக, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் களவிஜயம் மேற்கொண்டார். Read More »

வடக்கில் கடும் மழை: 36 குளங்கள் வான் பாய்கின்றன – உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ள குளங்களின் அணைகளை வெட்ட நடவடிக்கை

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட 36 குளங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளதுடன், சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை (28.11.2025) காலை 9.00 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவர அறிக்கையின் முக்கிய விவரங்கள் வருமாறு: மாங்குளம் மற்றும் வவுனியா பகுதிகளில் சடுதியான அதிக மழைவீழ்ச்சி

வடக்கில் கடும் மழை: 36 குளங்கள் வான் பாய்கின்றன – உடைப்பெடுக்கும் அபாயத்திலுள்ள குளங்களின் அணைகளை வெட்ட நடவடிக்கை Read More »

அசாதாரண காலநிலை: வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கைப் பேரிடர் காரணமாக, வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் விவசாயப் போதனாசிரியர் தரம் III மற்றும் பயிற்சித் தரம் ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் நாளை சனிக்கிழமை 29.11.2025 மற்றும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை 30.11.2025 ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்தன. எனினும்,

அசாதாரண காலநிலை: வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர் பரீட்சைகள் ஒத்திவைப்பு Read More »

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை – 27.11.2025

வடக்கு மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், இன்று வியாழக்கிழமை (27.11.2025) மாலை 6.00 மணி நிலவரப்படி 21 குளங்கள் வான்பாயும் நிலையில் உள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.இராஜகோபு தெரிவித்தார். வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, குளங்களின் நீர்மட்ட விவரங்கள் பின்வருமாறு: வான் பாயும் நிலையிலுள்ள குளங்கள்: 21

வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை – 27.11.2025 Read More »

சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் விசேட அறிவுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தில் இயங்கி வரும் முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அந்தந்தப் பிரதேசங்களில் நிலவும் இடர் நிலைமை மற்றும் வானிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, முஸ்லிம் பாடசாலைகளை மூடுவது அல்லது தொடர்ந்து நடத்துவது தொடர்பான தீர்மானங்களை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்வதற்கு, ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தல்

சீரற்ற வானிலை மற்றும் இடர் நிலைமையைக் கருத்திற் கொண்டு முஸ்லிம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் விசேட அறிவுறுத்தல் Read More »

சுகாதார அமைச்சின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்தக் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியான மாங்குளத்தில் மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் அமைக்கப்பட்டால் மட்டுமே, ஐந்து மாவட்ட மக்களும் அதன் நன்மைகளைச் சமமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். எனவே, மாங்குளத்தில் இத்திணைக்களத்துக்காக ஒதுக்கப்பட்ட காணியில் புதிய நிரந்தரக் கட்டடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ், 2025ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்

சுகாதார அமைச்சின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றங்கள் குறித்த மாதாந்தக் மீளாய்வு கூட்டம் நடைபெற்றது Read More »

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் முறைப்பாடளித்தால், அதை உடனடியாகச் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்காது, கட்டுமானம் முடிவடைந்த பின்னரே ஆராயும் நிலை காணப்படுவது குறித்து மக்கள் தமக்கு பல முறைப்பாடுகளை முன்வைப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், மக்களின் இவ்வாறான முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தவறும்பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் வலியுறுத்தினார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும்

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில்

காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »

வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையில் 10 முக்கிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் விசேட திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்கள் ஆகியனவற்றின் முழுமையான இணக்கப்பாட்டுடனேயே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இதன்போது குறிப்பிட்டார். வவுனியா மாவட்டத்துக்காக நகர அபிவிருத்தி

வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்து

யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் இன்று ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், சுற்றுலாத்துறை குறித்தும், குறிப்பாக உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் நாம் முழுமையான வெற்றியடைவதற்குச் சில சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றை யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) நடத்தியது.

வடக்கு சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்து Read More »