October 11, 2025

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது

இலங்கை நிர்வாக சேவைக்கு (திறமை அடிப்படையில்) ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் வடக்கு மாகாணசபைக்கு விடுவிக்கப்பட்ட உத்தியோகத்தர்களிற்கான நியமன கடிதங்கள் 10.10.2025 அன்று பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. திரு.மா.முரளி, உதவிச் செயலாளர், மகளிர் விவகார அமைச்சு திரு.ஜோ.லோரன்ஸ், உதவிச் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு திருமதி.கி.சிவரஞ்சினி, உதவிப் பணிப்பாளர், தொழில்துறைத் திணைக்களம் திரு.ச.லோகேஸ்வரன், செயலாளர், நகரசபை, மன்னார்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிற்கு வடக்கு மாகாண சபையில் உள்ள அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது Read More »

மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர்

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினார். அத்துடன் கடந்த காலங்களில் இடம்பெற்றதைப்போன்று மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் பணிப்புரைவிடுத்தார். வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து

மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து குடிபுகு சான்றிதழ் (COC) / அமைவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமல் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங்களில் வர்த்தக நடவடிக்கைகளை உள்ளூராட்சி மன்றங்களைத் தடை செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணித்தார். குடிபுகு சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமையால் குறித்த கட்டடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமையாலும் உள்ளூராட்சி மன்றங்களால் வரி அறவிட முடியாத நிலைமை காணப்படுகின்றமையாலும் அதனால் ஏற்படும் வருமான இழப்பையும் கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிதியும் திட்டமிடலும்,

உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »