October 8, 2025

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும்

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (08.10.2025) நடைபெற்றது. விழா நாயகன் அவர்தம் பாரியாருடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு, மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய ஆளுநர், திட்டமிடல் சேவையில் மூத்த – […]

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும் Read More »

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தைநல மருத்துவ விடுதி, அவசர சிகிச்சைப் பிரிவு என்பனவற்றை உள்ளடக்கியதான மருத்துவ விடுதித் தொகுதியும், மருத்துவர்களுக்கான தங்குமிடம் என்பனவும் படிப்படியாக வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் அடுத்த ஆண்டிலிருந்து அமைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட மருத்துவமனையில் இன்று புதன்கிழமை காலை (08.10.2025) நடைபெற்றது. கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட

மன்னார் மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது Read More »

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள்

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் திரு. நா.இராஜமனோகரன், அத்தியட்சகர், அரச முதியோர் இல்லம், கைதடி அவர்களின் தலைமையில் 02.10.2025 அன்று பி.ப 2.30 மணியளவில் இடம்பெற்றது. திருமதி. தனுஜா லுக்சாந்தன், மாகாணப் பணிப்பாளர், மாகாண சமூக சேவைகள் திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ்நிகழ்வின் பிரதம அதிதியாக திரு.செ.பிரணவநாதன் (பிரதிப் பிரதம செயளாளர் – ஆளணியும் பயிற்சியும்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு அதிதிகளாக செல்வி.எம்.சிவகுமாரி (பிரதம உள்ளக கணக்காளர் வ.மா)

முதியோர் தின வாரத்தின் 02ம் நாள் நிகழ்வுகள் Read More »

தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். – கௌரவ ஆளுநர்

01.01.2026 இலிருந்து வடக்கு மாகாணம் முழுவதிலும் லஞ்ச் சீற் பாவனையை தடை செய்வது எனவும், பதிலீடாக வாழையிலையைப் பயன்படுத்துவது மற்றும் உணவுத்தட்டுக்களை கொதிக்க வைப்பது ஆகியவற்றை பின்பற்றலாம் என்றும் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள், கௌரவ தவிசாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள மாநகர சபைகளின் மேயர்கள், நகர

தவிசாளர்களும், செயலாளர்களும் ஒன்றுபட்டுச் செயற்படுவதன் ஊடாகவே அபிவிருத்தி சாத்தியமாகும். – கௌரவ ஆளுநர் Read More »

திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். Read More »

நிபந்தனைகளுடனேயே தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவை மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கும் அதிகாரங்கள் உள்ளன – ஆளுநர்

எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக தற்போதைய யுகத்துக்கு ஏற்றவர்களாக மாறவேண்டும். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழை (NVQ) எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுக்கூட்டம் தந்தைசெல்வா அரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (07.10.2025) நடைபெற்றது.

நிபந்தனைகளுடனேயே தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவை மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கும் அதிகாரங்கள் உள்ளன – ஆளுநர் Read More »