September 2025

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது பயிரானது அறுவடையினை எட்டியுள்ள தருவாயில் வயல் விழா நிகழ்வானது முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 26.08.2025 அன்று காலை 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் திரு.ஜெ.பிரதீப் தலைமையிலும், அம்பாள்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் 04.09.2025 அன்று 09.00 மணிக்கு விவசாயப் போதனாசிரியர் […]

சின்ன வெங்காய உண்மை விதை உற்பத்தி நிகழ்ச்சித் திட்ட வயல் விழா Read More »

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யாழ் பொதுநூலகத்தினை இணைக்கும் அங்குராப்பண நிகழ்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று திங்கட்கிழமை மதியம் (01.09.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர். அதனைத்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் யாழ் பொதுநூலகத்தினை இணைக்கும் அங்குராப்பண நிகழ்வு ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை (01.09.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார். மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப் பணிகளை மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மேடை நிகழ்வுகள், மீன்பிடி கூட்டுத்தாபனத்தின்

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் இன்று திங்கட் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது Read More »

பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல்

பாத்தீனியம் களையானது பொறிமுறை, இரசாயன முறை மற்றும் சட்டமுறை மூலம் யாழ் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் பாத்தீனியக் களையை உயிரியல் முறை மூலம்; கட்டுப்படுத்துவதற்கு 26.08.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு நீர்வேலி வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில், திரு.இராதாகிருஸ்ணன் ஐங்கரன், தொழில்நுட்ப உதவியாளர், நீர்வேலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன், பிரதி விவசாயப் பணிப்பாளர், யாழ்ப்பாணம், திருமதி. டில்ருக்சி, பிரதிப் பணிப்பாளர், தேசிய பயிர் பாதுகாப்புப் சேவை, உதவி விவசாயப் பணிப்பாளர்கள்,

பாத்தீனியம் எனும் ஆக்கிரமிப்புக் களையை உயிரியல் கட்டுப்பாட்டு முறையில் கட்டுப்படுத்தல் Read More »

நாம் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. – ஆளுநர்

எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாகவும் – வெளிப்படைத்தன்மையாகவும் முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது சவால்கள் – அழுத்தங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மறைந்த ரகுநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், ரட்ணம் பவுண்டேசனின் ஏற்பாட்டில், விஷன் குளோபல் எம்பவமன்ர் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும்

நாம் நேர்மையாகவும் – வெளிப்படையாகவும் செயற்பட்டால் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை. – ஆளுநர் Read More »