மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா
2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் யாழ்மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி ஊக்குவித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தினை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைவிழா நிகழ்வானது திருநெல்வேலி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நந்தாவில் கிராமத்தில் 16.09.2025 அன்று காலை 09.00 மணிக்கு தொழில்நுட்ப உதவியாளர் இ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயப்பணிப்பாளர், வட மாகாணம் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதி விவசாயப்பணிப்பாளர், பாட விதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை […]
