September 19, 2025

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும்

அரச நிறுவனங்களின் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை வீட்டிலிருந்தவாறு செலுத்தக்கூடிய முறைமை உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எண்ணிமைப்படுத்தல் (டிஜிட்டலைஷேஷன்) மூலம் ஊழல் மோசடிகளைக் குறைக்க முடியும். எனவே வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களும் இந்தச் சேவைக்கு உள்ளீர்க்கப்படுவதை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை (19.09.2025) […]

ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக GovPay என்ற செயலியின் அறிமுகம் மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் Read More »

அபிவிருத்தி என்பது தனியே பௌதீக முன்னேற்றம் மாத்திரம் அல்ல. மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடைவதேயாகும். – ஆளுநர்

கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைக்கப்படுவதன் ஊடாக இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவது மாத்திரமல்ல இந்தப் பகுதியுமே அழகாக மாறவுள்ளது. இதற்கான நடவடிக்கை எடுத்த இந்த அரசாங்கத்தையும் கௌரவ அமைச்சர் சந்திரசேகர் அவர்களையும் பாராட்டுகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கொழும்புத்துறை இறங்குதுறை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் 140 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்புத்துறை இறங்குதுறையில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025)

அபிவிருத்தி என்பது தனியே பௌதீக முன்னேற்றம் மாத்திரம் அல்ல. மக்களின் வாழ்வாதாரமும் உயர்வடைவதேயாகும். – ஆளுநர் Read More »

காரைநகர் சீநோர் படகுத்தளத்தினை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும். – ஆளுநர்

வடக்கு மாகாணம் விரைவில் எழுச்சி பெற்ற மாகாணமாக மிளிரும். இந்த அரசாங்கத்தின் காலத்தில் நிச்சயம் இது நடக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காரைநகர் சீநோர் படகுத்தளத்தின் புனரமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு காரைநகர் சீநோர் படகுத்தளத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (18.09.2025) இடம்பெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் ஆகியோரும்

காரைநகர் சீநோர் படகுத்தளத்தினை மீள ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு முன்னரைப்போன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும். – ஆளுநர் Read More »

யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டம் நடைபெற்றது.

யாழ். மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (18.09.2025) நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறானதொரு தனியான

யாழ். மாவட்டத்தின் போக்குவரத்துப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டம் நடைபெற்றது. Read More »