August 2025

வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு அனலைதீவில், நடைபெற்றது.

மக்கள் எங்களைத்தேடி வரக்கூடாது. மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் அலுவலர்கள்தான் மக்களைத் தேடிச்சென்று அவர்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு அமைவாகவே பின்தங்கியுள்ள தீவுகளுக்கான எமது மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்தப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன. வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (07.08.2025) அனலைதீவில், அனலைதீவு ஹரிகர […]

வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு அனலைதீவில், நடைபெற்றது. Read More »

உள்ளுர் கலப்பின வெண்டி (GK OK Hybrid–2) அறிமுக வயல்விழா

அறிமுக வயல்விழா நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய வளாகத்தில் திரு.வை.ஞானபாஸ்கரன், பண்ணை முகாமையாளர் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண விவசாயப் பணிப்பாளர்(வடக்கு மாகாணம்), கலாநிதி S.J.அரசகேசரி -சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், திருமதி.பவளேஸ்வரன் பாலகௌரி பிரதி விவசாய பணிப்பாளர்(ஆராய்ச்சி),  திரு.சு.சஞ்சீவன் பிரதி விவசாயப்

உள்ளுர் கலப்பின வெண்டி (GK OK Hybrid–2) அறிமுக வயல்விழா Read More »

யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார்.

கார்கில்ஸ் நிறுவனம் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ (Cargills “ELEVATE” Soft Skills Development Program) தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய ஆளுநர், எமது இளையோரை மேம்படுத்த கார்கில்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு மிக

யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார். Read More »

இப்போது எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் பராமரிக்க மறந்து விடுகின்றோம். நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். – கௌரவ ஆளுநர்

போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பூந்தோட்டம், கோவிற்கடவை, துன்னாலை மத்தியில் ‘கரவை நலவாழ்வு காப்பகம்’ வடக்கு மாகாண ஆளுநரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், புலம்பெயர் தமிழர்களில்

இப்போது எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் பராமரிக்க மறந்து விடுகின்றோம். நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநருக்கும், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட் கிழமை மாலை (04.08.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அதன் ஊடாக கிடைத்த பெறுபேறுகள் மற்றும் பாடசாலையை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் அதிபரால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளங்களை, மாகாணப் பாடசாலைகளுடன்

கௌரவ ஆளுநருக்கும், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்றது

விளையாடும்போது வெற்றி என்பது எங்களுக்கு இலக்காக இருக்கவேண்டும். அந்த வெற்றியை உரிய தடத்தின் ஊடாகவே நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். வெற்றியைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக குறுக்குவழிகளை நாங்கள் நாடக்கூடாது. அது விளையாட்டின் பண்பல்ல. நாங்கள் நேர்வழியில் போராடி தோல்வியடையலாம். அது குறுக்கு வழியில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதைவிட சிறப்பானது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, கலாசார அலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண விளையாட்டு விழா

வடக்கு மாகாண விளையாட்டு விழா ஓமந்தையிலுள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்றது Read More »

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். எங்கள் திறமையான இளைஞர்கள், அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் மற்றும் எங்கள் மக்களின் உறுதியுடன், இலங்கையின் கல்விக்கான புதிய அத்தியாயத்தில் வடக்கு மாகாணம் ஒரு வெற்றியின் முன்மாதிரியாக இருக்கும் என நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில்,

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான மாகாணமட்டக் கலந்துரையாடல் பிரதமரும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமருக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை மதியம் (02.08.2025) நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் கல்விப்புலத்தில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கையை ஆளுநர் அவர்கள் முன்வைத்தார். அத்துடன் ஏனைய சில ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக வழங்கப்பட்ட அனுமதிக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். ஆளணி வெற்றிடத்தை நிரப்புவதற்கு குறிப்பாக ஆசிரிய நியமனத்துக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்

வடக்கு மாகாணத்தின் கல்வி மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல், கௌரவ பிரதமருக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையில் நடைபெற்றது. Read More »

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிமனையில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை (01.08.2025) நடைபெற்றது. வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரால், வலயம் தொடர்பான அடிப்படைத் தரவுகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் தமது வலயத்தின் பிரதான சவாலாக ஆளணி வெற்றிடம் அதிலும் ஆசிரிய வெற்றிடம் அதிகமாக உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. வடக்கின் ஏனைய வலயங்களுடன்

வவுனியா வடக்கு வலய கல்வி முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் Read More »

எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் களப்பயணம்

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட களப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) இடம்பெற்றது. முதலில் காஞ்சிரமோட்டைக்குச் சென்ற ஆளுநர் தலைமையிலான குழுவினர் அங்கு தற்போது வசிக்கும் 23 குடும்பங்களையும் சந்தித்தனர். அந்தப் பகுதிமக்கள், யானைவேலி அமைத்துத்தருமாறு, கிணறுகளை புனரமைத்துத்தருமாறும் கோரினர். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட

எல்லைக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்லுகின்ற நிலையில் அவர்களை நிரந்தரமாக அங்கு குடியமர்த்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயும் களப்பயணம் Read More »