August 13, 2025

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டமைக்கு நன்றிகளையும் தெரிவித்தார். பொருளாதார மத்திய நிலையத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (12.08.2025) நடைபெற்றது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் […]

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல் Read More »

கௌரவ ஆளுநருக்கும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், மன்னார் நகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (11.08.2025) நடைபெற்றது. மன்னார் நகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அவசரம் தேவை என்றும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாந்தை மேற்கு பிரதேசசபையின் வருமானத்தை அதிகரிப்பதற்குரிய வேலைத் திட்டங்களுக்கு உதவிகளை

கௌரவ ஆளுநருக்கும் மன்னார் நகர சபை, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. Read More »