August 7, 2025

உள்ளுர் கலப்பின வெண்டி (GK OK Hybrid–2) அறிமுக வயல்விழா

அறிமுக வயல்விழா நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய வளாகத்தில் திரு.வை.ஞானபாஸ்கரன், பண்ணை முகாமையாளர் அவர்களின்  தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக திரு.சண்முகராஜா சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் – மாகாண விவசாயப் பணிப்பாளர்(வடக்கு மாகாணம்), கலாநிதி S.J.அரசகேசரி -சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழகம், திருமதி.பவளேஸ்வரன் பாலகௌரி பிரதி விவசாய பணிப்பாளர்(ஆராய்ச்சி),  திரு.சு.சஞ்சீவன் பிரதி விவசாயப் […]

உள்ளுர் கலப்பின வெண்டி (GK OK Hybrid–2) அறிமுக வயல்விழா Read More »

யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார்.

கார்கில்ஸ் நிறுவனம் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ (Cargills “ELEVATE” Soft Skills Development Program) தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றிய ஆளுநர், எமது இளையோரை மேம்படுத்த கார்கில்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு மிக

யாழ் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ தொடக்க நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார். Read More »

இப்போது எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் பராமரிக்க மறந்து விடுகின்றோம். நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். – கௌரவ ஆளுநர்

போரால் உருக்குலைந்த எமது சமூகக் கட்டமைப்பின் காரணமாக முதியோர் நலக் காப்பங்கள் காலத்தின் தேவையாகவுள்ளன. உயிர் தந்த பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகவுள்ளபோதும் அது இன்றைய சூழலில் சாத்தியம் குறைந்த ஒன்றாக மாறிச் செல்கின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பூந்தோட்டம், கோவிற்கடவை, துன்னாலை மத்தியில் ‘கரவை நலவாழ்வு காப்பகம்’ வடக்கு மாகாண ஆளுநரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், புலம்பெயர் தமிழர்களில்

இப்போது எங்களை ஆளாக்கிய பெற்றோர்களை நாங்கள் பராமரிக்க மறந்து விடுகின்றோம். நன்றி மறந்தவர்களாகி வருகின்றோம். – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநருக்கும், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று திங்கட் கிழமை மாலை (04.08.2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அதன் ஊடாக கிடைத்த பெறுபேறுகள் மற்றும் பாடசாலையை வளர்ச்சிப் பாதையை நோக்கிக் கொண்டு செல்வதற்காக எடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் அதிபரால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளங்களை, மாகாணப் பாடசாலைகளுடன்

கௌரவ ஆளுநருக்கும், யாழ். இந்துக் கல்லூரி அதிபர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »