‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு
தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் லேர்ன்ஏசியா (LIRNEasia) நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு நோர்த்கேட் ஹொட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (01.07.2025) நடைபெற்றது. […]