July 2025

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்  அவர்களுக்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர்  தலைமையிலான சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையிலான சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (14.07.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் சாவகச்சேரி நகர சபையின் ஆளணி வெற்றிடங்கள் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் கோரிக்கை மனுவொன்றை தவிசாளர் ஆளுநரிடம் கையளித்தார். முடியுமானவற்றை நிறைவேற்றித் தருவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்  அவர்களுக்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர்  தலைமையிலான சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ_க்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை (14.07.2025) இடம்பெற்றது. இலங்கையிலிருந்து அடுத்த மாதத்துடன் தனது பணியை நிறைவு செய்து திரும்பவுள்ளதாக கனேடியத் தூதுவர் ஆளுநரிடம் தெரிவித்தார். இதுவரை அவர் வழங்கிய ஒத்துழைப்புக்கள் மற்றும் கனேடிய அரசாங்கம் கடந்த காலங்களில் மேற்கொண்ட உதவிகளுக்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் குறிப்பாக வன்னிப் பிராந்தியத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகளவில்

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும், இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு Read More »

வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

‘இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025’ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் கச்சாயில் இன்று திங்கட்கிழமை (14.07.2025) ஆரம்பமானது. யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி, தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை

வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

யாழ்ப்பாணம் பொதுநூலக திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவால் கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திட்டமுன்னேற்ற மீளாய்வை இரு வாரங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளுமாறும், இவற்றுக்குப் பொறுப்பாக பதவிநிலை அலுவலர் ஒருவரை நியமிக்குமாறும் யாழ். மாநகர சபை ஆணையாளருக்கு, ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின்

யாழ்ப்பாணம் பொதுநூலக திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் Read More »

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாண இடமாற்றக் கொள்கையை வினைத்திறனாக மாற்றியமைப்பதற்கும், ஆசிரிய இடமாற்றங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) ஆளுநர் செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசிரியர் இடமாற்றச் சபையில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும் எனவும், அனுமதியற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இடமாற்றச் சபையில்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா

மன்னார் மாவட்டத்தின் அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் பிரிவில் அகத்திமுறிப்பு அளக்கட்டு கிராமத்தில் மேட்டு நிலங்களில் சோளப் பயிர்ச்செய்கை அறுவடை விழா திரு.ஆ.யு.ஆ. அம்ஜத் எனும் விவசாயியின் நிலத்தில் 03.07.2025 அன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை அகத்திமுறிப்பு விவசாயப்போதனாசிரியர் திருமதி.லோறன்சியா லியோன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன், பாடவிடய உத்தியோகத்தர்கள்,    விவசாய  போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். விவசாயப் போதனாசிரியர் கருத்து தெரிவிக்கையில் சோளச்செய்கை

கலப்பின சோளப் பயிர்செய்கை( MIMZ 4) அறுவடைவிழா Read More »

நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பதவியே எனது முதல் நியமனம். தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் எனக்குத் தெரியும். இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு இயன்றவரையில் முயற்சிசெய்வேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். திரு. திருமதி சிவப்பிரகாசம் வாசன் ஜெசிந்தா தம்பதியரின் திட்ட உருவாகத்தில், புலம்பெயர் தேசத்தில் வாழும் நயினாதீவு உறவுகள் மற்றும் ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்க வாறன்டோர்ப் கிளையின் நிதிப் பங்களிப்பில் இலங்கை

நயினாதீவு பிரதேச மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. Read More »

புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கலந்துரையாடல் நடைபெற்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், நீர்பாசனத் திணைக்களப் பொறியியலாளர்கள், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர்கள், யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்புக்குள்

புலிக்குளம் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் இன்று வெள்ளிக்கிழமை (11.07.2025) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது Read More »

நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியீட்டத்தின் (PSDG) கீழ் பயிரிடப்பட்ட பரசூட் முறையிலான நெற்செய்கையின் அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 02.07.2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இ.இளங்குமரன் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.கிருசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர்

நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான வயல் விழா நிகழ்வு Read More »