வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களை வடமாகாணத்தவர்கள் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்
வடக்கிலுள்ள தொழில் கல்வி நிலையங்களில் வெளிமாகாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் கல்வி கற்கின்றனர். எமது மாகாணத்தவர்கள் அதனைப் பயன்படுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். தொழில் கல்வியின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (17.07.2025) இடம்பெற்ற சான்றிதழ் […]