July 2025

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (15 – 31 ஆடி, 2025)

இவ் வாரம், 15 – 31 ஆடி 2025 அரச விதை உற்பத்திப் பண்ணை – வவுனியா பூங்கனியியல் கரு மூலவளநிலையம் – அச்சுவேலி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் – முல்லைத்தீவு

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழுள்ள பண்ணைகளில் பெற்றுக்கொள்ளக் கூடிய நாற்றுகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய உள்ளீடுகள் – (15 – 31 ஆடி, 2025) Read More »

கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 19 யூலை 2025 அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள கல்மடு மூலிகை கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது மூலிகைக் கிராமத்தின் தற்போதைய நிலைமை பற்றி கிளிநொச்சி மாவட்ட மருத்துவ அத்தியட்சகர், மருத்துவப் பொறுப்பதிகாரி மற்றும் பணியாளர்கள் ஆகியோரை சந்தித்துக் கேட்டறிந்து கொண்டதுடன் அதன் எதிர்கால அபிவிருத்தி சம்பந்தமாகவும் கலந்துரையாடினார்.

கௌரவ ஆளுநர் அவர்கள் கல்மடு மூலிகைக் கிராமத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார் Read More »

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தகத்திற்குரிய புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வு 2025 யூலை 11ம் திகதி அன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்தவத் திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி தி. சர்வானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. புதிய கட்டடத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்

கிளிநொச்சி சித்த மத்திய மருந்தக புதிய கட்டடத் திறப்பு விழா Read More »

கௌரவ ஆளுநரை துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (24.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் க.செந்தூரன், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி இராசையா நளினி ஆகியோருடன் சபையின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். தமது பிரதேசங்களில் பல்வேறு வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையில் ஒதுக்கப்படும் நிதி

கௌரவ ஆளுநரை துணுக்காய், மாந்தை கிழக்கு மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன் கிழமை (23.07.2025) நடைபெற்றது. மகளிர் விவகார அமைச்சு, சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம்,

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகள் – கௌரவ ஆளுநர்

தரமான பொருட்களை உற்பத்தி செய்தாலும், அதனைப் பொதியிடுவது சந்தைப்படுத்துவதிலேயே அந்தப் பொருட்களுக்கான கேள்வி தங்கியுள்ளது. எனவே, இவை தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலும் உங்களை அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐ.நா.வின் தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் (யுனிடோ) ஏற்பாட்டில் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்னான பயிற்சிப்பட்டறை திண்ணை ஹோட்டலில் இன்று புதன்கிழமை (23.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது,

பொதியிடல் தொடர்பான தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிவூட்டும் யுனிடோ நிறுவனத்துக்கு நன்றிகள் – கௌரவ ஆளுநர் Read More »

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போரில் ஒரு தொகுதியினருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன், வடக்கு மாகாணத்திலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று புதன்கிழமை காலை (23.07.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்வுகள் காணப்பட்டன. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் –

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போரில் ஒரு தொகுதியினருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் Read More »

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும்

யாழ்ப்பாணம் நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடலில், எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து (01.08.2025) இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்தார். இதைச் செயற்படுத்தும் அதேநேரம் இதனால் எழக்கூடிய

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் Read More »

புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி

வவுனியா மாவட்டத்தில் தோணிக்கல் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாண்டிக்குளம் கிராமத்தில் திரு .M. தேவராசா எனும் விவசாயியின் நெற்காணியில் 17.07.2025 அன்று காலை 9:00 மணியளவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி J.M. முரளீதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் திரு கு.கஜரூபன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயப் போதனாசிரியர் திரு. சு.தர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு P.A சரத்சந்திர பிரதம விருந்தினராக

புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி Read More »

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (22.07.2025) இடம்பெற்றது. விழாநாயகனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஆளுநர் இங்கு உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் குகதாஸ் அவர்கள் அங்கு கடமைபுரிந்ததை நினைவுகூர்ந்தார். எப்போதும் நேர்ச்சிந்தனையுடன்

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா Read More »