July 23, 2025

புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி

வவுனியா மாவட்டத்தில் தோணிக்கல் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தாண்டிக்குளம் கிராமத்தில் திரு .M. தேவராசா எனும் விவசாயியின் நெற்காணியில் 17.07.2025 அன்று காலை 9:00 மணியளவில் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி J.M. முரளீதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் திரு கு.கஜரூபன் (பாடவிதான உத்தியோகத்தர் – நெல்) அவர்களின் வழிகாட்டலின் கீழ் விவசாயப் போதனாசிரியர் திரு. சு.தர்சன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு P.A சரத்சந்திர பிரதம விருந்தினராக […]

புரட்சிகரமான வெற்றி: பரசூட் முறையில் ஒரு ஹெக்டயருக்கு 9 தொன் நெல் உற்பத்தி Read More »

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை (22.07.2025) இடம்பெற்றது. விழாநாயகனுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஆளுநர் இங்கு உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக தான் பணியாற்றிய காலத்தில் குகதாஸ் அவர்கள் அங்கு கடமைபுரிந்ததை நினைவுகூர்ந்தார். எப்போதும் நேர்ச்சிந்தனையுடன்

வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – நிதி ஆகப் பணியாற்றி ஓய்வுபெறும் எஸ்.குகதாஸ் அவர்களின் பிரிவுபசார விழா Read More »

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் – கௌரவ ஆளுநர்

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சிமன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், சில உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கான அமைப்பே உள்ளூராட்சிமன்றம் என்பதை நினைவிலிருத்திச் செயற்படவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் – கௌரவ ஆளுநர் Read More »

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. – கௌரவ ஆளுநர்

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. எதிர்காலத்தில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி பொறிமுறையை இலகுவாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இதன் ஊடாக இடைத்தரகர்களை விட உற்பத்தியாளர்களே அதிக இலாபத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள்

பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் ஊடாக எமது நாட்டுக்கு பெரும் அந்நியச்செலவாணி கிடைக்கப்பெற்று வருகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் பொன்னையா குகதாசன் தலைமையிலான குழுவினர் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை மாலை (21.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் ஆதன மதிப்பீடு மேற்கொண்டு வரி அறவிடுவதற்கான ஒத்துழைப்புக்கள் மற்றும் சபையின் ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தனர். மேலும், சபையின் இரண்டு உப அலுவலகங்கள் தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் நிலையில் அதனை அமைத்துத் தருவதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »