July 2, 2025

கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும்

போர் – இடப்பெயர்வுக்கு முன்னர் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் எப்படியொரு சமநிலை இருந்ததோ அதைப்போன்றதொரு நிலையை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்று செவ்வாய்க்கிழமை (02.07.2025) பாடசாலையில் பதில் அதிபர் இ.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரும், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராஜாவும், கௌரவ விருந்தினராக வலிகாமம் […]

கீரிமலை நகுலேஸ்வர மகா வித்தியாலய நிறுவுநர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் Read More »

‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு

தவறான தகவல்கள் என்ற விடயம் முன்னைய காலத்திலிருந்தே இருந்து வந்தாலும், டிஜிட்டல் யுகம் அதன் அணுகலையும் வேகத்தையும் பெருக்கியுள்ளது, இதனால் பொய்யிலிருந்து உண்மையைப் பிரிப்பது மிகவும் சவாலானதாக மாறியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் லேர்ன்ஏசியா (LIRNEasia) நிறுவனமும் இணைந்து நடத்திய ‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு நோர்த்கேட் ஹொட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (01.07.2025) நடைபெற்றது.

‘இலங்கையில் தகவல் சீர்குலைவு ஆராய்ச்சியின் தொடக்கம் மற்றும் டிஜிட்டல் மீள்தன்மையை உருவாக்குவதற்கான மன்றம்’ என்ற நிகழ்வு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார்

வவுனியா மாவட்டத்துக்கு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) பயணம் மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பயணத்தின் ஓர் அங்கமாக வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார். இதன்போது சபையின் தவிசாளர் எஸ்.சி.வீரக்கோன், ஆளுநர் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் ஆகியோரை வரவேற்றார். வவுனியா பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தை ஆளுநர் பார்வையிட்டார். நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்டு

வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச சபையையும் பார்வையிட்டார் Read More »

வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா

மன்னார் மாவட்டத்தின் உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் தேத்தாவடி கிராமத்தில் வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல்விழா திரு.நா.கிருஸ்ணமூர்த்தி எனும் விவசாயியின் வயல்நிலத்தில் 01.07.2025 இன்று நடைபெற்றது. இவ்வயல் விழாவை உயிலங்குளம் விவசாயப்போதனாசிரியர் திருமதி. காயத்திரி கிசோபன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வயல் விழாவின் விருந்தினர்களாக பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி பிரியதர்சினி றமணேந்திரன் உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.ஜே.மேர்வின் றொசான் றோச் பாடவிடய உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப்

வயல் நிலங்களில் மறுவயற்பயிர்செய்கை அறுவடை வயல் விழா Read More »