பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் நாள் நிகழ்வு
அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது சுற்றுச் சூழலைக் கவனத்திலெடுக்காமல் செயற்படமுடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்தே அதனைச் செயற்படுத்தவேண்டும். இதன்மூலமே எதிர்கால சந்தத்திக்கு வளமான சுற்றாடலைக் கையளிக்கமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் நாள் நிகழ்வு கைதடி சிறுவர் பூங்காவில் 10.06.2025 இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார். அவர் தனது உரையில், […]