July 2024

மாணவர்களின்எதிர்காலம் கருதி செயற்படும் ஜனாதிபதிக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக செயற்படவேண்டும். – புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய, நாட்டிலுள்ள வறியக் குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு 14/07/2024 அன்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட 662 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில் நிதிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் மேலதிக சிரேஷ்ட செயலாளர் சமன் பந்துசேன, வடக்கு மாகாண பிரதம செயலாளர், […]

மாணவர்களின்எதிர்காலம் கருதி செயற்படும் ஜனாதிபதிக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக செயற்படவேண்டும். – புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவிப்பு Read More »

கிளிநொச்சி வியாபார சேவை நிலையம் திறந்து வைப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 12/07/2024  அன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உத்தியோகஸ்தர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள வியாபார சேவை நிலையமும் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் ஆண்கள் விடுதியும் திறந்துவைக்கப்பட்டது.

கிளிநொச்சி வியாபார சேவை நிலையம் திறந்து வைப்பு Read More »

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே. – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நேற்று (12/07/2024) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர  நியமனங்களை பெற்றுக்கொடுக்க பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களின்

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே. – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு Read More »

யாழ் மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தித்து தருமாறு பிரதமரிடம், ஆளுநர் அவர்கள் கோரிக்கை

யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12/07/2024) நடைபெற்றது. கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் விசேட பங்குபற்றுதலுடன், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதால் “உரித்து” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக

யாழ் மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தித்து தருமாறு பிரதமரிடம், ஆளுநர் அவர்கள் கோரிக்கை Read More »

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் பிரிவில் முன்று முறிப்பு கிராமத்தில் நீல வெட்டியர் குளம் வயல்வெளியில் பரசூட் முறையாலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 2024.07.04 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நட்டாங்கண்டல் விவசாய போதனாசிரியர் சண்முகராசா சரண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் யாமினி சசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக பாண்டியன்குள கமநல சேவை நிலையத்தின் பெரும் போக உத்தியோகத்தர், முன்று

பரசூட் முறையிலான நெற் செய்கை வயல் விழா நிகழ்வு – முல்லைத்தீவு மாவட்டம் Read More »

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழாவானது வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவிலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த பூங்கனியியல் கருமூலவள மாதிரிப் பண்ணையில் 2024.07.03 ஆம் திகதி காலை 9.30 மணியக்கு பண்ணை முகாமையாளர் தங்கராஜா – கமலதீபன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி செந்தில்குமரன் சுகந்தினி கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்

உழுந்துப் பயிர்ச்செய்கையில் மஞ்சள் சித்திர வடிவ வைரஸ் நோய் முகாமைத்துவம் தொடர்பான வயல்விழா – தேராவில் பண்ணை Read More »

சிறுவர் இல்லங்கள் தொடர்பாக ஆளுநர் செயலகத்தின் ஊடக அறிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு கௌரவ ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.  இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில்  கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய

சிறுவர் இல்லங்கள் தொடர்பாக ஆளுநர் செயலகத்தின் ஊடக அறிக்கை Read More »

மக்களின் தேவைகளைபூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர். – பருத்தித்துறை தொண்டைமானாறு சித்தமத்திய மருந்தக திறப்பு விழாவில் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தொண்டைமானாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் 09/07/2024 அன்று  திறந்து வைக்கப்பட்டது. 60 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டடம் அமைந்துள்ள 12 பரப்புக் காணி அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், “மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட ஆயுர்வேத சித்த மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனூடாக இப்பகுதி

மக்களின் தேவைகளைபூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர். – பருத்தித்துறை தொண்டைமானாறு சித்தமத்திய மருந்தக திறப்பு விழாவில் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் 08/07/2024 அன்று  ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு  மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் Read More »

மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம்

இலங்கையிலுள்ள 9 மகாணங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களின் இயலளவை  மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மாகாணங்களுக்கு இடையே புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணத்தை சேர்ந்த பல அலுவலகங்களும் இவ்வாறான விஜயங்களை மேற்கொண்டு வருகின்றது. வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான தேவை காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனென்றால் நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுகள் தோறும் மேற்கொள்ளப்படும் அரச கணக்குகள் குழுவின் மதிப்பீடு, உற்பத்தித்திறன்

மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம் Read More »