தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர், காலஞ்சென்ற இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களுக்கான இரங்கல் செய்தி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 14 ஆவது எதிர்க்கட்சித் தலைவரும், சிரேஷ்ட அரசியல்வாதியும், சட்டத்தரணியுமாகிய திருவாளர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கவலை அடைகின்றேன். சுமார் ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் தமிழ் மக்களின் உரிமைக் குரலாக இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்ததுடன், தமிழ் மக்களின் உரிமைக்காக சர்வதேச ரீதியிலும் செயற்பட்ட தலைவராக காலம் சென்ற இரா. சம்பந்தன் அவர்கள் காணப்படுகின்றார். இன ஐக்கியம், ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பவற்றின் அடிப்படையில் நாட்டு மக்களின் […]