June 26, 2024

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் இன்று (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும்,கௌரவ ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு Read More »

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26/06/2024) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 1500 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அவர்களை மீள் குடியேற்றுவதற்கான உரிய

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் Read More »

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம்

யூன் 19, 2024 அன்று, வவுனியா மாவட்டச் செயலகத்திலும் மற்றும் யூன் 20, 2024 அன்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் ஊராட்சி முற்றக் (Townhall) கூட்டங்கள் நடைபெற்றன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன. வவுனியாவில்

ஊராட்சி முற்றக் கூட்டங்கள் – வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டம் Read More »