June 19, 2024

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் உரித்து தேசிய வேலை திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட பயனாளர்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால்  இன்று வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இதற்கான நிகழ்வு (16/06/2024) நடைபெற்றது. இதன்போது 442  பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் […]

மன்னார் மாவட்ட மக்களுக்கான காணி உறுதி பத்திரங்கள் வழங்கிவைப்பு Read More »

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி இலக்குகளை உரியமுறையில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் (16/06/2024) நடைபெற்ற போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்களும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், முப்படையினர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். மடு தேவாலயத்திற்கு

ஜனாதிபதி தலைமையில் மன்னார் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டம் Read More »

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

எதிர்வரும் 05 ஆண்டுகளுக்காக திட்டமிடப்படும் அபிவிருத்தி இலக்குகள், நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர், யுவதிகளின் தலைமைத்துவம் அவசியம் தேவைப்படுவதாகவும்  ஜனாதிபதி கூறியுள்ளார். மன்னார் நகரசபை மண்டபத்தின் கேட்போர் கூடத்தில்  கடந்த ஞாயிற்றுக் கிழமை (16/06/2024) மாலை நடைபெற்ற மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ். எம். சார்ள்ஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர்.    

மன்னார் மாவட்ட இளைஞர் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது Read More »